3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

ரஞ்சி கோப்பையில் சொதப்பிய ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால்!

ரஞ்சி கோப்பையில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் ரோஹித், ஜெய்ஸ்வால் மோசமாக விளையாடியுள்ளார்கள்.

ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் - கோப்புப் படங்கள்.

Published On :23 ஜனவரி 2025, 1:24 pm IST

ரஞ்சி கோப்பையில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் ரோஹித், ஜெய்ஸ்வால் மோசமாக விளையாடி ஆட்டமிழந்தார்கள்.

இந்தியாவின் டெஸ்ட், ஒருநாள் அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ரோஹித் சர்மா 3 ரன்களுக்கும் மற்றுமொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

பார்டர் கவாஸ்கர் தொடரில் 1-3 என தோல்வியடைந்த இந்திய அணியின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

ரோஹித், கோலி ஓய்வு பெற பலரும் கருத்து தெரிவிக்க அடுத்ததாக உள்ளூர் போட்டிகளில் விளையாடும்படி பிசிசிஐ பரிந்துரைந்தது.

இதிலும் விராட் கோலி பங்கேற்காமல் ஏமாற்றம் அளித்தார். ரோஹித், ஜெய்ஸ்வால் மும்பை அணியில் ஜம்மு காஷ்மீருக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார்கள்.

ஆகிப் நபி ஓவரில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். ரோஹித் ஆட்டமிழந்த விதம்தான் மிகவும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

ரஹானே (12), ஷ்ரேயாஷ் ஐயர் (11) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். ஷிவம் துபே டக்கவுட்டானர். மும்பை சார்பில் ஷர்துல் தாக்குர் மட்டுமே சிறப்பாக விளையாடி 51* ரன்கள் எடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் சார்பில் உமர் நஜிர் 4, யுதிர் சிங் 3, ஆகிப் நபி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள்.

மும்பை அணி 33 ஓவர் முடிவில் 129/9 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.