
காலேவில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸி. அணி 400 ரன்களை கடந்து வலுவான நிலையில் உள்ளது.
வார்னே - முரளிதரன் டிராபியில் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் காலேயில் நேற்று (ஜன.29) தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
தற்போது, ஆஸி. அணி 400 ரன்களை கடந்து வலுவான நிலையில் உள்ளது.
99.5 ஓவர் முடிவில் ஆஸி. அணி 401/3 ரன்கள் எடுத்துள்ளது. இரண்டாம் நாள் முழுவதும் விளையாடினால் 500, 600 ரன்கள் கூட எடுக்க வாய்ப்பிருக்கிறது.
உஸ்மான் கவஜா 177 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த பார்ட்னர்ஷப்பில் 266 ரன்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை பந்துவீச்சாளர்கள் எந்தவிதமான புதிய திட்டங்களும் இல்லாமல் பந்துவீசி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.