பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

சர்வதேச கிரிக்கெட்டில் மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

News image
மிட்செல் ஸ்டார்க்- படம் | AP
Updated On :30 ஜனவரி 2025, 4:56 pm

DIN

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நேற்று (ஜனவரி 29) தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 654 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

700 விக்கெட்டுகள்

இலங்கைக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், அவரது 700-வது சர்வதேச விக்கெட்டினை வீழ்த்தி சாதனை படைத்தார். குறிப்பாக, அவரது பிறந்த நாளில் (35-வது பிறந்த நாள்) இந்த சாதனையைப் படைத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இலங்கை அணியின் திமுத் கருணாரத்னேவை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம், அவர் இந்த சாதனையைப் படைத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமை மிட்செல் ஸ்டார்க்கையே சேரும்.

அவருக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களான கிளென் மெக்ராத் மற்றும் பிரெட் லீ இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக வீழ்த்தியுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணிக்காக மிட்செல் ஸ்டார்க் டெஸ்ட் போட்டிகளில் 377 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 244 விக்கெட்டுகள் மற்றும் டி20 போட்டிகளில் 79 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.