சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக கேப்டன்களுக்கான போட்டோ ஷூட் இருக்காது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகின்றன.
இதையும் படிக்க: சிஎஸ்கேவின் முதன்மையான பார்ட்னராக இணைந்த எத்திகாட் ஏர்வேஸ்!
கேப்டன்களுக்கான போட்டோ ஷூட் இல்லை
ஐசிசி தொடர் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து அணிகளின் கேப்டன்களுக்கான போட்டோ ஷூட் இருக்கும். கேப்டன்கள் அனைவரும் குழுவாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்வார்கள். ஆனால், பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக, இவை எதுவும் இருக்காது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக, அனைத்து அணிகளுக்குமான பயண அட்டவணை மாற்ற முடியாத அளவுக்கு கடிமனாக உள்ளது. இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சாதனை பட்டியலில் டான் பிராட்மேனுடன் இணைந்த உஸ்மான் கவாஜா!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் தொடக்க விழா பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விளம்பரம் வெளியிடும் முன்பாக அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டும்!

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!

ராமேசுவரத்தில் 12 இயற்கை எரிவாயு பேருந்துகள்: அமைச்சா் சிவசங்கா் தொடங்கி வைத்தாா்

காரைக்குடியில் வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


