கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

4-வது டி20: இந்தியா பேட்டிங்; ஷிவம் துபே அணியில் சேர்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

News image

படம் | பிசிசிஐ

Updated On :31 ஜனவரி 2025, 1:08 pm

இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி புணேவில் இன்று (ஜனவரி 31) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.

இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக ஷிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் விளையாடாத அர்ஷ்தீப் சிங் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். ரிங்கு சிங்கும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

இங்கிலாந்து அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மார்க் வுட்டுக்குப் பதிலாக சாக்யூப் மஹ்முத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜேமி ஸ்மித்துக்குப் பதிலாக ஜேக்கோப் பெத்தேல் சேர்க்கப்பட்டுள்ளார்.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் இருப்பதால், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களம் காண்கிறது. இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை இழக்காமலிருக்கும் முனைப்பில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி களம் காண்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.