அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

முகமது ஷமியின் முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம்! - நீதிமன்றம் உத்தரவு

முகமது ஷமி மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி...

News image

முன்னாள் மனைவி ஹசின் ஜஹானுடன் முகமது ஷமி.

Updated On :2 ஜூலை 2025, 4:01 am

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜஹானுக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, கடந்த 2014 ஆம் ஆண்டு ஹசின் ஜஹான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கும் இடையிலான கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து கோரி பிரிந்தனர்.

அப்போது முகமது ஷமி தனது மனைவிக்கு ரூ. 50,000 மற்றும் மகளுக்கு ரூ. 80,000 மாதாந்திர ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று அலிபூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு இந்த மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஜஹான் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

ஹசின் ஜஹான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி அஜோய் குமார் முகர்ஜி தலைமையிலான அமர்வு, முகமது ஷமி தன்னுடைய முன்னாள் மனைவி ஹசின் ஜஹானுக்கு மாதம் ரூ.1.5 லட்சமும், மகளுக்கு ரூ. 2.5 லட்சமும் வழங்க வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ஷமியை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு, ஹசின் ஜஹான் கொல்கத்தா அணியின் மாடலாகவும், சியர்லீடராகவும் பணியாற்றிவந்தார். இருவரும் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்தத் தம்பதியினருக்கு 2015 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. 

2018 ஆம் ஆண்டு வரதட்சணை, துன்புறுத்தல் மற்றும் மேட்ச் பிக்சிங் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஹசின் ஜஹான் சுமத்தியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு காரணமாக, முகமது ஷமியில் மத்திய ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Star Indian pacer Mohammed Shami has faced a significant legal setback, as the Calcutta High Court has ordered him to pay monthly alimony totaling Rs 4 lakh to his estranged wife, Hasin Jahan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.