15 ஆண்டுகளில் முதல் முறை... சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு வந்த சோதனை!

கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொதப்பியுள்ளனர்.
England captain Ben Stokes
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்படம் | AP
Published on
Updated on
1 min read

கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொதப்பியுள்ளனர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

சொந்த மண்ணில் வந்த சோதனை

இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடத் தவறினர். முதல் 6 பேட்டர்களில் 3 பேர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

பென் டக்கெட், ஆலி போப் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மூவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஸாக் கிராலி 19 ரன்கள் மற்றும் ஜோ ரூட் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு லார்ட்ஸ் திடலில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸ் ஒன்றில் இங்கிலாந்து அணியின் முதல் 6 பேட்டர்களில் மூன்று பேர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்திருந்தனர். அதன் பின், இந்த 15 ஆண்டுகளில் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் டாப் 6 பேட்டர்களில் மூவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்ததில்லை. ஆனால், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் டாப் 6 பேட்டர்களில் மூவர் டக் அவுட்டாகியுள்ளனர்.

இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறிய போதிலும், ஜேமி ஸ்மித் மற்றும் ஹாரி ப்ரூக்கின் அபார ஆட்டம் அணியை சரிவிலிருந்து மீட்டது. இவர்களது பார்ட்னர்ஷிப் 200 ரன்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

For the first time in 15 years, England's top-order batsmen have failed in home matches.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com