
இந்திய மகளிரணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் விலகியுள்ளார்.
இந்திய மகளிரணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெற்று வருகிறது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்த டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இங்கிலாந்து கேப்டன் விலகல்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4-வது டி20 போட்டி வருகிற ஜூலை 9 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், காயம் காரணமாக டி20 தொடரின் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலிருந்தும் இங்கிலாந்து அணியின் கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் விலகியுள்ளார்.
மூன்றாவது டி20 போட்டியில் அணியை வழிநடத்திய டம்மி பியூமாண்ட், மீதமுள்ள போட்டிகளிலும் இங்கிலாந்து அணியை கேப்டனாக வழிநடத்துவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக விலகியுள்ள நாட் ஷிவர் பிரண்ட்டுக்குப் பதிலாக மையா பௌச்சியர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மீதமுள்ள டி20 போட்டிகளிலிருந்து நாட் ஷிவர் பிரண்ட் விலகியுள்ள நிலையில், ஒருநாள் தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு அவர் தயாராக இருப்பார் எனக் கூறப்படுகிறது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் ஜூலை 16 முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
The England women's captain has ruled out from the T20 series against the Indian women's team.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.