பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஜிம்பாப்வே ஃபாலோ ஆன்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆனது.

News image
- படம் | ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Updated On :7 ஜூலை 2025, 3:21 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆனது.

தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

தென்னாப்பிரிக்கா டிக்ளேர் - 626/5

முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்து 626 ரன்கள் எடுத்திருக்கையில் டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் வியான் முல்டர் முச்சதம் விளாசி அசத்தினார். அவர் 334 பந்துகளில் 367 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 49 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டேவிட் பெடிங்ஹம் 82 ரன்களும், லுஹான் டி பிரிட்டோரியஸ் 78 ரன்களும் எடுத்தனர்.

தனாகா சிவங்கா மற்றும் குண்டாய் மட்டிகிமு தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். வெலிங்டன் மசகட்ஸா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

ஜிம்பாப்வே ஃபாலோ ஆன்

தென்னாப்பிரிக்க அணி 626 ரன்களில் டிக்ளேர் செய்ய, ஜிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் 170 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது ஃபாலோ ஆன் ஆனது.

அந்த அணியில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 55 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, மத்வீர் 25 ரன்களும், கேப்டன் கிரைக் எர்வின் 17 ரன்களும் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் பிரிநெலான் சுப்ராயன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கோடி யூசுஃப் மற்றும் வியான் முல்டர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், கார்பின் போஸ்ச் மற்றும் செனுரான் முத்துசாமி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

ஃபாலோ ஆன் ஆன ஜிம்பாப்வே அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 40 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.

summary

Zimbabwe were bowled out for 170 in their first innings in the second Test against South Africa and were forced to follow on.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.