கருப்பு சட்டை அணிந்து திமுக எம்.எல்.ஏக்கள் வருகை!மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

போட்டியின் நடுவே வெளியேறிய ரிஷப் பந்த்; இந்திய அணிக்கு சிக்கலா?

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆடுகளத்தை விட்டு போட்டியின் நடுவே வெளியேறினார்.

News image

விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் - படம் | பிசிசிஐ

Updated On :10 ஜூலை 2025, 9:52 pm IST

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆடுகளத்தை விட்டு போட்டியின் நடுவே வெளியேறினார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் இன்று (ஜூலை 10) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 200 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.

ரிஷப் பந்த்துக்கு காயம்

மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாவது செஷனில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், பந்தினை தடுக்க முயன்று அவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

முதல் இன்னிங்ஸின் 34-வது ஓவரை இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வீசினார். விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த், அவருக்கு இடதுபுறம் சென்ற பந்தினை தடுக்க டைவ் அடித்தார். இருப்பினும், அவரால் பந்தினை முழுமையாக தடுக்க முடியவில்லை. இந்த முயற்சியில் அவருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது.

பந்தினை தடுக்க முயன்று கையில் அடிபட்ட ரிஷப் பந்த்துக்கு, உடனடியாக ஆடுகளத்தில் வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி மருத்துவ உதவி செய்யப்பட்டது. இருப்பினும், அவரால் தொடர்ந்து கீப்பிங் செய்ய முடியவில்லை. இதனையடுத்து, பும்ராவின் ஓவர் முடிவடைந்தவுடன், ரிஷப் பந்த் ஆடுகளத்திலிருந்து வெளியேறினார்.

விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் போட்டியின் நடுவே காயம் காரணமாக வெளியேறிய நிலையில், அவருக்குப் பதிலாக துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார்.

காயம் காரணமாக போட்டியின் நடுவே வெளியேறிய ரிஷப் பந்த், பேட்டிங் செய்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவருடைய காயத்தின் தன்மை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை இந்திய அணியின் மருத்துவக் குழு சோதித்து வருகிறது. காயம் காரணமாக அவர் பேட்டிங் செய்ய முடியாத சூழல் உருவாகும் பட்சத்தில், அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் எனக் கூறப்படுகிறது.

Summary

Wicketkeeper Rishabh Pant left the field due to injury on the first day of the third Test against England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.