இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் டி20 போட்டிகளில் 13,000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெறும் விடாலிட்டி பிளாஸ்ட் மென் டி20 தொடரில் லங்காஷயர் அணியும் யார்க்ஷியர் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் லங்காஷயர் அணி முதலில் பேட்டிங் செய்து 174 ரன்கள் குவிக்க, யார்க்ஷாயர் அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
லங்காஷயர் அணி சார்பிக் 77 ரன்கள் குவித்த ஜாஸ் பட்லர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்த அரைசதம் மூலம் பட்லர் டி20 போட்டிகளில் 13,000 என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.
உலக அளவில் இந்த மைல்கல்லை எட்டிய 7-ஆவது வீரராகவும் இங்கிலாந்தின் வரிசையில் 2-ஆவது வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.
மொத்தமாக பட்லர் 457 டி20 போட்டிகளில் விளையாடி 13, 046 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 45.74ஆக இருக்கிறது. ஸ்டிரைக் ரேட் 145.97ஆகவும் இருப்பது கவனிக்கத்தக்கது.
ஐபிஎல் தொடரில் பட்லர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடுகிறார். கடந்த 2025 ஐபிஎல் சீசனில் 500 ரன்களை கடந்ததும் குறிப்பிடத்தக்கது.
பட்லருக்கு முன்பாக அலெக்ஸ் ஹேல்ஸ் 13,814 ரன்கள் குவிக்க, முதலிடத்தில் கிறிஸ் கெயில் 14,562 ரன்களுடன் இருக்கிறார்.
ஜாஸ் பட்லர் கூடுதலாக 1,500 ரன்கள் எடுத்தால் உலக சாதனை படைக்க வாய்ப்பிருக்கிறது.
Summary
England player Jos Buttler has reached a new milestone of 13,000 runs in T20Is.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சர்வதேச டி20 போட்டிகளில் அக்ஷர் படேல் புதிய சாதனை!

கால்பந்து உலகக் கோப்பையில் புதிய உலக சாதனை படைத்த மெஸ்ஸி!

சர்வதேச டி20 போட்டிகளில் ஷிவம் துபே புதிய சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட் புதிய சாதனை!
விடியோக்கள்
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!



