மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

முத்தரப்பு டி20 தொடர்: நியூசி.க்கு 121 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே!

முத்தரப்பு டி20 தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் எடுத்துள்ளது.

News image
- படம் | ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Updated On :18 ஜூலை 2025, 12:39 pm

இணையதளச் செய்திப் பிரிவு

முத்தரப்பு டி20 தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் எடுத்துள்ளது.

ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்றையப் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே முதலில் விளையாடியது.

121 ரன்கள் இலக்கு

முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் வெஸ்லி மத்விர் 32 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பிரையன் பென்னட் 21 ரன்களும், டோனி முனியோங்கா 13 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஆடம் மில்னே, மிட்செல் சாண்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்குகிறது.

summary

Zimbabwe, playing first against New Zealand in the tri-nation T20 series, scored 120 runs for the loss of 7 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.