ஷுப்மன் கில்லுக்கு உண்மையான சோதனை இனிதான் தொடங்குகிறது: முன்னாள் ஆஸி. கேப்டன்

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு உண்மையான சோதனை மான்செஸ்டர் டெஸ்ட்டிலிருந்து தொடங்கவுள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் தெரிவித்துள்ளார்.
ஷுப்மன் கில்
ஷுப்மன் கில்படம் | பிசிசிஐ
Published on
Updated on
1 min read

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு உண்மையான சோதனை மான்செஸ்டர் டெஸ்ட்டிலிருந்து தொடங்கவுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி மான்செஸ்டரில் வருகிற ஜூலை 23 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் கூறுவதென்ன?

இன்னும் மூன்று நாள்களில் மான்செஸ்டர் டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு உண்மையான சோதனை மான்செஸ்டர் டெஸ்ட்டிலிருந்து தொடங்கவுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்காக இந்திய அணி தயாராகி வருகிறது. அனைவரது கவனமும் இளம் கேப்டன் ஷுப்மன் கில் மீது திரும்பியுள்ளது. இளம் வீரரான ஷுப்மன் கில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமைப் பண்பும் பெரிய அளவில் குறைகூறும் அளவுக்கு இல்லை. ஆனால், மான்செஸ்டர் டெஸ்ட்டிலிருந்துதான் ஷுப்மன் கில்லுக்கான உண்மையாக சோதனை தொடங்குகிறது. டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக ஷுப்மன் கில் எந்த அளவுக்கு தயாராகியுள்ளார் என்பது முடிவு செய்யப்படுவதற்கான நேரம் உருவாகியுள்ளது.

இந்திய அணி எப்படி இருக்க வேண்டும் என்பதை ஷுப்மன் கில் முடிவு செய்ய வேண்டும். கேப்டனுக்கான உண்மையான வேலை வந்துவிட்டது. அணிக்காக முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஷுப்மன் கில் இருக்கிறார். இந்திய அணியின் ஃபீல்டிங் சரிசெய்யப்பட வேண்டும். சிறந்த அணிகள் ஃபீல்டிங்கிலும் சிறப்பாக செயல்படுவார்கள். அவர்கள் எளிதில் ரன்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். கேட்ச் வாய்ப்பினை அவர்கள் தவறவிட மாட்டார்கள்.

சிறப்பான இந்திய அணியை தேர்வு செய்ய வேண்டிய இடத்தில் ஷுப்மன் கில் இருக்கிறார். அணிக்காக வீரர்கள் என்ன செய்ய வேண்டும், தனிப்பட்ட முறையில் அவர்களது பொறுப்பு என்ன என்பதை வீரர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும். அணியில் உள்ள வீரர்களிடம் கேப்டன் தொடர்ந்து தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். சிறந்த தலைவர்கள் தொடர்ச்சியாக தகவல்களை பரிமாறுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். அணியில் உள்ள வீரர்களுக்கு கேப்டன் ஊக்கமளிப்பவராகவும், நம்பிக்கையளிப்பவராகவும் இருக்க வேண்டும் என்றார்.

Summary

The real test for Indian captain Shubman Gill will begin with the Manchester Test, says the former Australian captain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com