4-வது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவார்; உறுதிப்படுத்திய முகமது சிராஜ்!

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவதை முகமது சிராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.
India's Jasprit Bumrah applauses during the third cricket test match between England and India
ஜஸ்பிரித் பும்ராபடம் | AP
Published on
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவதை முகமது சிராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை மறுநாள் (ஜூலை 23) தொடங்குகிறது.

இந்த தொடரின் தொடக்கத்திலேயே ஜஸ்பிரித் பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதனால், இந்திய அணிக்கு மிக முக்கியமான மான்செஸ்டர் டெஸ்ட்டில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.

உறுதிப்படுத்திய முகமது சிராஜ்

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில், மான்செஸ்டர் டெஸ்ட்டில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவதை முகமது சிராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முகமது சிராஜ் பேசியதாவது: எனக்குத் தெரிந்தவரை மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார். காயம் காரணமாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தொடர்ச்சியாக மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. மான்செஸ்டர் டெஸ்ட்டில் தொடர்ச்சியாக சிறந்த பகுதிகளில் பந்துவீசி இங்கிலாந்து வீரர்களுக்கு அழுத்தம் கொடுப்பதே எங்களது திட்டம்.

லார்ட்ஸ் டெஸ்ட்டில் பொறுமையை கடைபிடித்து இங்கிலாந்து அணியை நிதானமாக விளையாட வைத்தோம். அதனையே மான்செஸ்டர் டெஸ்ட்டிலும் செய்யவுள்ளோம். டெஸ்ட் கிரிக்கெட்டை அதன் தன்மை மாறாமல் முறையாக விளையாடுவது எங்களுக்குப் பிடித்திருக்கிறது என்றார்.

Summary

Mohammad Siraj has confirmed that Jasprit Bumrah will play in the fourth Test against England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com