மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூலை 21) அறிவித்துள்ளது.

News image
ஜிம்பாப்வே அணி வீரர்கள்- படம் | ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Updated On :21 ஜூலை 2025, 1:21 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூலை 21) அறிவித்துள்ளது.

நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த முத்தரப்பு டி20 தொடர் நிறைவடைந்த பிறகு, நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தங்களுக்குள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூலை 30 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூலை 21) அறிவித்துள்ளது.

16 பேர் கொண்ட ஜிம்பாப்வே அணியை கிரைக் எர்வின் கேப்டனாக வழிநடத்துகிறார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி விவரம்

கிரைக் எர்வின் (கேப்டன்), பிரையன் பென்னட், தனாகா சிவங்கா, பென் கரண், டிரெவர் குவாண்டு, ராய் கலா, டனுனுர்வா மகோனி, கிளைவ் மடாண்ட், வின்செண்ட் மசகேசா, வெலிங்டன் மசகட்ஸா, பிளெஸ்ஸிங் முஸராபானி, நியூமேன் நியான்ஹுரி, சிக்கந்தர் ராஸா, டஃபாட்ஸ்வா சிகா, நிக்கோலஸ் வெல்ச், சீன் வில்லியம்ஸ்.

டெஸ்ட் போட்டி அட்டவணை

முதல் போட்டி - ஜூலை 30 - ஆகஸ்ட் 3, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடல்

2-வது போட்டி - ஆகஸ்ட் 7 - ஆகஸ்ட் 11, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடல்

summary

The Zimbabwe Cricket Board announced the Zimbabwe squad for the Test series against New Zealand today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.