
தமிழக வீரர் சாய் சுதர்சன் தனது முதல் அரைசதத்திலேயே வரலாறு படைத்துள்ளார்.
சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடியதால் ஆண்டர்சன் டெண்டுல்கர் டிராபியின் முதல் போட்டியில் அறிமுகமானார்.
முதல் போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், அடுத்த இரண்டு போட்டிகளில் அவருக்குப் பதிலாக கருண் நாயர் விளையாடினார்.
தற்போது, 4ஆவது டெஸ்ட்டில் மீண்டும் பிளேயிங் லெவனில் அறிமுகமான சாய் சுதர்சன் அரைசதம் (61) அடித்து அசத்தினார்.
இங்கிலாந்து மண்ணில் மான்செஸ்டர் திடலில் 1974க்குப் பிறகு அரைசதம் அடித்தவர்களில் இரண்டாவது வீரராகவும் அதிக ரன்கள் அடித்தவர்களில் முதல் நபராகவும் சாதனை படைத்துள்ளார்.
முதல் நாள் போட்டிக்குப் பிறகு சாய் சுதர்சன் பேசியதாவது:
ஷேடோவ் பேட்டிங்கை, நான் தினமும் செய்வேன். அது எனது பழக்கம் ஆகிவிட்டது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதைச் செய்து பழகுவேன்.
இது மிகவும் சிறந்த திறமை. யார் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். மனதளவில் நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
ஸ்டோக்ஸுக்கு எதிராக விளையாடியது நல்ல அனுபவம். அணிக்கு என்னால் முடிந்த சிறப்பானதைத் தருகிறேன் என்பதே நல்ல உணர்வுதான்.
இங்கிலாந்து மண்ணில் விளையாடும்போது ஆக்ரோஷமான இயல்புக்குத் தயாராக இருக்க வேண்டும். உண்மையில் நான் அதை விரும்புகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.