தனுஷின் 55 ஆவது படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

தனுஷின் 55 ஆவது திரைப்படத்தில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இணைந்துள்ளது குறித்து...
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி - சாய் அபயங்கர் - நடிகர் தனுஷ்
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி - சாய் அபயங்கர் - நடிகர் தனுஷ்எக்ஸ்/Wunderbar films
Updated on
1 min read

நடிகர் தனுஷின் 55 ஆவது திரைப்படத்தில், இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமரன் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் 55 ஆவது திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்தப் புதிய படத்தை தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

இந்த நிலையில், இந்தப் புதிய திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பதாக, தயாரிப்பு நிறுவனம் இன்று (ஜன. 29) அறிவித்துள்ளது.

முன்னதாக, ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான இசையமைப்பாளர் சாய் அபயங்கர், நடிகர் பிரதீப் ரங்கநாதனின் “டியூட்” படத்திற்கு இசையமைத்திருந்தார்.

ஏற்கெனவே, நடிகர் சூர்யாவின் “கருப்பு”, நடிகர் கார்த்தியின் “மார்ஷல்” மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் - இயக்குநர் அட்லீ கூட்டணியின் புதிய படம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி - சாய் அபயங்கர் - நடிகர் தனுஷ்
ராக் ஸ்டார் இயக்குநரின் புதிய பட வெளியீட்டுத் தேதி!
Summary

composer Sai Abhyankar has joined actor Dhanush's 55th film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com