

பிரபல பாலிவுட் இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்கும் புதிய திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ராக் ஸ்டார், ஹைவே, லவ் ஆஜ் கல், அமர் சிங் சம்கிலா போன்ற பாலிவுட் திரைப்படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக அறியப்படுபவர் இயக்குநர் இம்தியாஸ் அலி.
இம்தியாஸ் அலி இயக்கத்தில் பிரபல பஞ்சாபி பாடகரும் நடிகருமான தில்ஜித் தோசன்ஜ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் உருவாகி வருகின்றது.
இதுவரை பெயர் அறிவிக்கப்படாத இந்தப் படத்தின் மூலம், இயக்குநர் இம்தியாஸ் அலி - இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் - பாடலாசிரியர் இர்ஷாத் காமில் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இந்தப் படம் வரும் ஜூன் 12 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னதாக, இயக்குநர் இம்தியாஸ் அலி மற்றும் நடிகர் தில்ஜித் தோசன்ஜ் கூட்டணியில் 2024 ஆம் ஆண்டு வெளியான அமர் சிங் சம்கிலா படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
மேலும், இம்தியாஸ் அலி இயக்கத்தில் வெளியான ராக் ஸ்டார் திரைப்படம் சமீபத்தில் மறுவெளியீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இணையவாசிகளிடையே கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.