
இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் போட்டியில் மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி 321 ரன்கள் குவித்துள்ளது.
மான்செஸ்டரில் நேற்று (ஜூலை 23) தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதல்நாள் முடிவில் இந்திய அணி 264/4 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் அரைசதம் அடித்திருந்தார்கள்.
ரிஷப் பந்த் கிறிஸ் ஓக்ஸ் பந்தில் காலில் காயமாக ரிடையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.
இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று ரிஷப் பந்த் பேட்டிங் ஆட வந்தது இந்திய ரசிகர்களை உற்சாகமூட்டியுள்ளது. திடலில் அனைவரும் பலத்த வரவேற்பை அளித்தார்கள்.
நொண்டிக்கொண்டே வந்த ரிஷப் பந்த் பொறுமையாக விளையாடி வருகிறார்.
மதிய உணவு இடைவேளை வரை 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்துள்ளது.
களத்தில் ரிஷப் பந்த் 39, வாஷிங்டன் சுந்தர் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.