தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்: இங்கிலாந்தில் அபாரம்!

ரிஷப் பந்த் இங்கிலாந்தில் புதிய சாதனை படைத்துள்ளார்.
ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்படம் | பிசிசிஐ
Published on
Updated on
1 min read

ரிஷப் பந்த் இங்கிலாந்தில் புதிய சாதனை படைத்துள்ளார்.

மான்செஸ்டரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக புதன்கிழமை தொடங்கிய நான்காவது டெஸ்ட்டில், டாஸ் வென்ற இங்கிலாந்து பௌலிங்கை தோ்வு செய்தது.

இந்தியாவின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் கூட்டணி நிதானமாக விளையாடியது. உணவு இடைவெளிக்குப் பிறகு ராகுல் 46 ரன்களிலும் ஜெய்ஸ்வால் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்தும் சாய் சுதா்சன் - ரிஷப் பந்த் இணை இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சோதித்த நிலையில், க்றிஸ் வோக்ஸ் வீசிய பந்து ரிஷப் பந்த்தின் காலில் பட்டதில் அவர் காயமடைந்தார்.

வலியில் தவித்த ரிஷப் பந்த் ’ரிட்டையா்டு ஹா்ட்’ முறையில் வெளியேறிய நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இன்று 2-வது நாள் ஆட்டம் துவங்கியதும், ஜடேஜா 20 ரன்களில் ஆட்டமிழக்க அவருக்குப் பின்னர் வந்த வாஷிங்டன் சுந்தர் சிறிது நேரம் போராடி 27 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அறிமுகப் போட்டியி விளையாடி கம்போஜ் ரன் ஏதுமின்றி வெளியேற நிதானமாக விளையாடிய தாக்குர் 41 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இந்தநிலையில், காயத்திலிருந்து மீண்டு வந்து பேட்டிங் ஆடி அசத்திய ரிஷப் பந்த், அரைசதம் விளாசி வியக்க வைத்தார். அவர் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தநிலையில், மான்செஸ்டரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக புதன்கிழமை தொடங்கிய நான்காவது டெஸ்ட்டில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் களமிறங்கியதன் மூலம் எஸ்.இ.என்.ஏ நாடுகள் எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்களில் இந்திய அணிக்காக அதிக முறை 50+ ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்துள்ளார்.

அவர் மேற்கண்ட நாடுகளில் 14 முறை 50 அல்லது அதற்கும் மேலான ரன்களைத் திரட்டியுள்ளார். முன்னாள் வீரர் எம். எஸ். தோனி 13 முறை 50+ ரன்கள் எடுத்துள்ளார்.

Summary

Rishabh Pant breaks MS Dhoni's record

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com