
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் நாளை (ஜூலை 30) முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நாளை தொடங்குகிறது.
டாம் லாதம் விலகல்; மிட்செல் சாண்ட்னர் கேப்டன்
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், நியூசிலாந்து அணியின் கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த டாம் லாதமுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால், அவர் முதல் டெஸ்ட்டிலிருந்து விலகியுள்ளார். இதனையடுத்து, டெஸ்ட் போட்டிகளுக்கான 32-வது கேப்டனை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் டி20 போட்டியில் விளையாடியபோது, டாம் லாதமுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்திலிருந்து குணமடைந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்ட் போட்டிகளுக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள மிட்செல் சாண்ட்னர், இதுவரை நியூசிலாந்து அணிக்காக 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,066 ரன்கள் மற்றும் 74 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணி விவரம்
மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), டாம் பிளண்டல், டெவான் கான்வே, ஜேக்கோப் டஃபி, மாட் ஃபிஷர், மாட் ஹென்றி, டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், வில்லியம் ஓ’ரூர்க், அஜாஸ் படேல், மைக்கேல் பிரேஸ்வெல், ரச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித், வில் யங்.
Mitchell Santner has been named captain for the Test series against Zimbabwe.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.