லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

டி20 தொடரையும் வென்றது இங்கிலாந்து; ஹாரி ப்ரூக் காட்டில் வெற்றி மழை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

england players

படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளும் டி20 தொடரில் விளையாடி வருகின்றன.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி பிரிஸ்டாலில் நேற்று (ஜூன் 8) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஜோஸ் பட்லர் விலகிய பிறகு அணியின் புதிய கேப்டனாக ஹாரி ப்ரூக் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது தலைமையிலான இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுவதுமாக கைப்பற்றிய நிலையில், தற்போது டி20 தொடரையும் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்தது. இங்கிலாந்து அணி 8 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில், அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹாரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடர் வெற்றிகளைப் பதிவு செய்து வருகிறது. 11 நாள்கள் இடைவெளியில் ஹாரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி இரண்டு தொடர்களை வென்று அசத்தியுள்ளது.

இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (ஜூன் 10) சௌத்தாம்டானில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.