
டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்காக ககிசோ ரபாடா புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவின் ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
இந்த அசத்தலான பந்துவீச்சின் மூலம் அந்நாட்டிற்காக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் ஆலன் டொனால்டை முந்தியுள்ளார்.
ஆலன் டொனால்டை விட குறைவான போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்
1. டேல் ஸ்டெயின் - 439 விக்கெட்டுகள் (93 போட்டிகள்)
2. ஷான் பொல்லாக் - 421 விக்கெட்டுகள் (108 போட்டிகள்)
3. மகாயா நிதினி - 390 விக்கெட்டுகள் (101 போட்டிகள்)
4. ககிசோ ரபாடா - 332 விக்கெட்டுகள் (71 போட்டிகள்)
5. ஆலன் டொனால்டு - 330 (72 போட்டிகள்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.