சாபங்கள் நீங்கிய ஆண்டு: விளையாட்டு உலகின் பொற்காலமான 2025!

விளையாட்டு உலகின் பொற்காலமாக மாறியிருக்கும் 2025-இல் நடந்த வெற்றிகள் குறித்து...
2025 important winnig Teams
2025-இல் அசத்திய அணிகள், வீரர்கள் குறித்து... கோப்புப் படங்கள்.
Published on
Updated on
1 min read

விளையாட்டு உலகில் இந்தாண்டு பொன்னான ஆண்டாக மாறியிருக்கிறது. முதல்முறை கோப்பைகளை பல அணிகள் வென்றுள்ளன.

கிரிக்கெட், கால்பந்து ரசிகர்களுக்கு இந்தாண்டை மறக்கவே முடியாது. விளையாட்டு உலகின் பொற்காலமாக 2025 மாறியிருக்கிறது.

ஐபிஎல் தொடரில் 18 ஆண்டுகளில் ஆர்சிபி முதல் கோப்பை வென்றது. ஐசிசி தொடர்களில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கோப்பையை கறுப்பினத்தைச் சேர்ந்த டெம்பா பவுமா வாங்கித் தந்துள்ளார்.

இதேபோல் கால்பந்து உலகிலும் பல மறக்க முடியாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

சாம்பியன்ஸ் லீக்கை பிஎஸ்ஜி அணி முதல்முறையாக இந்தாண்டு வென்றது. முதல் போட்டியை 1986-87இல் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

2025-இல் நடந்த சாதனைகள்

1. டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்

40 ஆண்டுகளில் டாட்டன்ஹாம் அணி வென்ற முதல் ஐரோப்பிய கால்பந்து பட்டம் இதுவாகும். கடைசியாக 2008-இல் இங்கிலீஷ் லீக் கோப்பையையும், வென்றிருந்தது.

சுமார், 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோப்பையை வென்று அசத்தியது.

2. ஹாரி கேனின் முதல் பட்டம்

இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி கேன் இதுவரை எந்தவொரு மேஜர் பட்டத்தையும் கைப்பற்றவில்லை. அவர் செல்லும் கிளப் எல்லாமே தோல்வியை சந்தித்தது.

இந்தாண்டு பெயர்ன் மியூனிக் அணிக்காக புன்டஸ்லீகா கோப்பையை வென்றார்.

3. கோ அஹெட் ஈகிள்ஸ்

நெதர்லாந்தில் நடைபெறும் கேஎன்விபி கோப்பையை 92 ஆண்டுகளில் முதல்முறையாக வென்று அசத்தியது கோ அஹெட் ஈகிள்ஸ் கால்பந்து அணி.

4. போலாக்னா அணி

இத்தாலியன் கோப்பையை 51 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக போலாக்னா அணி வென்று அசத்தியது.

5. கிறிஸ்டல் பேலஸ் அணி

மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி எஃப்ஏ கோப்பை கிறிஸ்டல் பேலஸ் அணி வென்றது.

கடைசியாக 1905ஆம் ஆண்டு வென்றிருந்த கிறிஸ்டல் பேலஸ் அணி 119 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது மிகப்பெரிய பட்டத்தை வென்று அசத்தியது.

6. நியூகேஸ்டல் அணி

கரோபௌ கோப்பையை நியூகேஸ்டல் அணி வென்று தங்களது 56 ஆண்டு கோப்பைகளை வெல்லாத சாபத்தை முறியடித்தது.

7. பிஎஸ்ஜி

சாம்பியன்ஸ் லீக்கை பிஎஸ்ஜி அணி முதல்முறையாக இந்தாண்டு வென்றது. முதல் போட்டியை 1986-87இல் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

8. ஆர்சிபி

ஐபிஎல் தொடங்கிய 18 ஆண்டுகளில் ஆர்சிபி அணி தங்களது முதல் ஐபிஎல் கோப்பையை ரஜத் படிதார் தலைமையில் வென்றது.

விராட் கோலிக்கும் இது முதல் ஐபிஎல் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.

9. தென்னாப்பிரிக்கா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை முதல்முறையாக தென்னாப்பிரிக்க அணி வென்றது. நாக அவுட் போட்டிகளில் சொதப்பிய தெ.ஆ. அசத்தல் வெற்றி பெற்றது.

ஐசிசி கோப்பைகளையே வெல்லாமல் இருந்த தெ.ஆ. அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com