அவரது பெயர் டெம்பா..! கேப்டனுக்காக பாடல் பாடிய தெ.ஆ. வீரர்கள்!

டபிள்யூடிசியை வென்ற கேப்டனுக்காக பாடல் பாடிய தென்னாப்பிரிக்க வீரர்கள் குறித்து...
His Name is Temba coming from langa song by proteas video
தென்னாப்பிரிக்க வீரர்கள் பவுமாவுக்காக பாட்டு பாடிய காட்சி. படம்: ஐசிசி
Published on
Updated on
1 min read

டபிள்யூடிசியை வென்ற கேப்டனுக்காக தென்னாப்பிரிக்க வீரர்கள் பாடல் பாடிய விடியோ வைரலாகி வருகிறது.

நடப்பு சாம்பியனாக இருந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலக டெஸ் சாம்பியன்ஷிப்பை தென்னாப்பிரிக்கா வென்றது.

27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை வென்றுதந்த கேப்டனாக டெம்பா பவுமாவுக்கு உலகம் முழுவதும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

முதல் 10 போட்டிகளில் 9 -இல் வென்று சாதனை கேப்டனாக டெம்பா பவுமா மாறியுள்ளார். டெம்பா என்றால் நம்பிக்கை என்று பொருள்.

இந்நிலையில், ஐசிசி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கேப்டனுக்காக தென்னாப்பிரிக்க வீரர்கள் பாடல் பாடிய விடியோ இருக்கிறது.

அந்த விடியோவில் வரும் வரிகளில் , “அவர் பெயர் டெம்பா, லங்காவில் இருந்து வந்திருக்கிறார். ரன்களை குவிக்க வந்திருக்கிறார், ரன்களை குவிக்க வந்திருக்கிறார். புரோட்டியஸ் அணிக்காக விளையாடுகிறார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கறுப்பினத்தைச் சேர்ந்தவரான டெம்பா பவுமாவுக்கு இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் அதிகளவு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஐஐசி தொடர்களில் பலமுறை நாக் அவுட் சுற்றில் சொதப்பிய தெ.ஆ. கோப்பை வென்றதற்கு பவுமா முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com