முதல் டெஸ்ட்: இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!

கே எல் ராகுல், ரிஷப் பந்த் சதம் வீண்... விக்கெட் வீழ்த்த முடியாமல் இந்தியா திணறல்...
இந்தியா தோல்வி
இந்தியா தோல்விபடம்|இந்திய கிரிக்கெட் அணி பதிவு
Published on
Updated on
1 min read

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் இன்று(ஜூன் 24) காலை தொடங்கியது. ஐந்தாம் நாள் ஆட்டம் முடிவதற்குள் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 373 ரன்களை 5 விக்கெட்டுகள் இழப்புக்கு எடுத்ததால் வெற்றியை தங்கள் பக்கம் வசப்படுத்தியது.

முதல் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ரிஷப் பந்த் சதம் உதவியுடன் 471 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 6 ரன்கள் முன்னிலை பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல்.ராகுல் சதம் விளாசினார். அவரைத் தொடர்ந்து, ரிஷப் பந்த்தும் சதமடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்ததன் மூலம், இந்தியா மொத்தம் 370 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து, 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்டிங் செய்து நேற்றைய நான்காம் நாள் ஆட்டம் முடிவில் 21 ரன்கள் விக்கெட் இழப்பின்றி எடுத்தது.

இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், முதல் விக்கெட்டுக்கே இங்கிலாந்து 188 ரன்கள் சேர்த்து இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் பென் டக்கெட் 149 ரன்கள் குவித்தார்.

தொடக்கவீரர் ஸாக் க்ராலி 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தபின் சீரான இடைவெளியில் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் விழுந்தன. எனினும், ஜோ ரூட் நிலைத்து நின்று அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு நங்கூரமிட்டார். இறுதியில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 373 ரன்களை 5 விக்கெட்டுகள் இழப்புக்கு எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com