
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய மே.இ.தீ. வீரர் ஷமர் ஜோசப் கிரிக்கெட் உலகில் கவனத்தை ஈர்த்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸி. அணி 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி முதல் டெஸ்ட் கடந்த ஜூன் 25-இல் பார்படாஸில் தொடங்கியது.
இந்தப் போட்டியில் ஆஸி. அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வென்றது.
இருப்பினும் மே.இ.தீ. அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷமர் ஜோசப் உலக கிரிக்கெட்டில் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளார்.
ஆஸி.க்கு எதிரான இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள், 2-ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் என அசத்தினார்.
ஆஸி.க்கு எதிராக இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மற்ற அணிகளுக்கு எதிராக 16 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
ஆஸி.க்கு எதிராக முதல் 3 டெஸ்ட்டிலும் 5 விக்கெடுகளை எடுத்தவர்கள் பட்டியலில் முதல் மே.இ.தீ.வீர்ராக ஷமர் ஜோசப் இணைந்துள்ளார். இந்தப் பட்டியலில் இருக்கும் வீரர்கள்:
1. டாம் ரிச்சர்ட்சன் (இங்கிலாந்து)
2. சார்லி லெவலின் (தென்னாப்பிரிக்கா)
3. பிராங்க் போஸ்டர் (இங்கிலாந்து)
4. ஃபசல் மஹ்மூத் (பாகிஸ்தான்)
5. ஷமர் ஜோசப் (மே.இ.தீ.)
Shamar Joseph has become the first west Indians bowler to take 5 wickets in the first 3 Tests against Australia.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.