பிரபாத் ஜெயசூர்யா அசத்தல்: இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தொடரை வென்ற இலங்கை!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இலங்கை அணி குறித்து...
Sri Lanka's Prabath Jayasuriya acknowledges after taking five Bangladeshi wickets during the fourth day of the second cricket test match between Sri Lanka and Bangladesh in Colombo,
5 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் கையை தூக்கிக் காட்டும் பிரபாத் ஜெயசூர்யா. உடன் இலங்கை வீரர்கள். படம்: ஏபி.
Published on
Updated on
1 min read

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என இலங்கை அணி வென்றது.

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

இதில் முதல் டெஸ்ட் டிரா ஆனது. இரண்டாவது டெஸ்ட் ஜூன் 25-இல் கொழும்புவில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.

முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 247 -க்கு ஆல் அவுட்டாக, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 458-க்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம், இலங்கை அணி 211 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

வங்கதேசம் அணி 2-ஆவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 26 ரன்கள் அடித்தார்.

இலங்கை அணியில் 2-ஆவது இன்னிங்ஸில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். தனஞ்ஜெய டி சில்வா, தரிந்து ரத்னநாயகே தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் தொடரை 1-0 என வென்று அசத்தியது.

ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் இலங்கை பேட்டர் பதும் நிசாங்கா தேர்வானார்.

Summary

Sri Lanka won the Test series against Bangladesh 1-0. prabath jeyasurya take fifer, sri lanka won by an innings and 78 runs against bangladesh in second test.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com