மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஐசிசி தரவரிசை: விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் முன்னேற்றம்!

ஐசிசியின் ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் முன்னேற்றம் பெற்றுள்ளனர்.

News image
கோலியுடன் ஷ்ரேயஸ் ஐயர்...- படம் | ஏபி
Updated On :5 மார்ச் 2025, 8:24 am

DIN

ஐசிசியின் ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் முன்னேற்றம் பெற்றுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த வாரத்துக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியல் இன்று(மார்ச் 5) வெளியிடப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் இந்தப் பட்டியலில் முன்னேற்றம் பெற்று வருகின்றனர்.

அதன்படி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் பெற்றுள்ளனர். ஷ்ரேயஸ் ஐயர் ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியும் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இவர்கள் தவிர்த்து இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 177 ரன்கள் விளாசி புதிய சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஸ்த்ரான் அதிரடியாக 13 இடங்கள் முன்னேறி முதல் 10 இடங்களை எட்டியுள்ளார். அதேவேளையில் இந்திய அணி கேப்டன் 2 இடங்கள் சரிந்து 5 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்கள்

ஷுப்மன் கில் -791 புள்ளிகள்

பாபர் அசாம் - 770 புள்ளிகள்

ஹென்ரிச் கிளாசன் -760 புள்ளிகள்

விராட் கோலி - 747 புள்ளிகள்

ரோஹித் சர்மா -745 புள்ளிகள்

ஹாரி டெக்டர் -713 புள்ளிகள்

டேரில் மிட்செல் -705 புள்ளிகள்

ஸ்ரேயாஸ் ஐயர்-702 புள்ளிகள்

சரித் அசலங்கா -694 புள்ளிகள்

இப்ராஹிம் ஸ்த்ரான் - 676 புள்ளிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.