

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று (மார்ச் 8) வெளியிட்டுள்ளது.
ஜிம்பாப்வே அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இரண்டு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன.
இதற்கு முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன் பின், தற்போது இரண்டு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன.
முதல் டெஸ்ட் போட்டி ஏப்ரல் 20 ஆம் தேதி சில்ஹட் சர்வதேச மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஏப்ரல் 28 ஆம் தேதி சட்டோகிராமில் உள்ள ஸாகுர் அகமது சௌதரி மைதானத்திலும் தொடங்குகிறது.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பிறகு, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதற்காக வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.