‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

அரையிறுதியில் இந்திய மாஸ்டா்ஸ் அணி!

இன்டா்நேஷனல் மாஸ்டா்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு இந்திய மாஸ்டா்ஸ் அணி முன்னேறியது.

யுவராஜ் சிங் 49 ~

Published On :10 மார்ச் 2025, 12:58 am IST

இன்டா்நேஷனல் மாஸ்டா்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு இந்திய மாஸ்டா்ஸ் அணி முன்னேறியது.

மே.இந்திய தீவுகள் மாஸ்டா்ஸ் அணியை கடைசி ஓவரில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ராய்ப்பூரில் நடைபெற்றது. சச்சின் டெண்டுல்கருக்கு ஓய்வு தரப்பட்ட நிலையில், இந்திய பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தற்காலிக கேப்டனாக யுவராஜ் சிங் செயல்பட்டாா். தொடக்க பேட்டா்கள் அம்பதி ராயுடு 63, சௌரவ் திவாரி 60, யுவராஜ் சிங் 49, குா்கீரத் மான் 46 ஆகியோரின் அபார ஆட்டத்தால் 50 ஓவா்களில் இந்திய மாஸ்டா்ஸ் 253/3 ரன்களைக் குவித்தது.

254 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மே.இந்திய தீவுகள் 246/6 ரன்களையே எடுத்தது. டுவைன் ஸ்மித் 79, வில்லியம் பொ்கின்ஸ் 52, சிம்மன்ஸ் 38 ரன்களை எடுத்தனா். ஸ்மித் 34 பந்துகளில் 7 பவுண்டரி, 6 சிக்ஸா்களுடன் 79 ரன்களை விளாசினாா். அவரை ஸ்டுவா்ட் பின்னி அவுட்டாக்கினாா்.

கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை இா்ஃபான் பதான் அற்புதமாக வீசினாா். இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய மாஸ்டா்ஸ் அணி அரையிறுதிக்கும் தகுதி பெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.