அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

சூப்பர் ஓவரில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி இலங்கை அசத்தல் வெற்றி!

முத்தரப்பு ஒருநாள் தொடரில் சூப்பர் ஓவரில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி இலங்கை ஏ அணி அசத்தல் வெற்றி பெற்றது.

News image

படம் | இலங்கை கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :15 ஜூன் 2026, 7:24 pm IST

முத்தரப்பு ஒருநாள் தொடரில் சூப்பர் ஓவரில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி இலங்கை ஏ அணி அசத்தல் வெற்றி பெற்றது.

முத்தரப்பு ஒருநாள் தொடரில் தம்புல்லாவில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்தியா முதலில் விளையாடியது.

சூர்யான்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகம் அரைசதம்

முதலில் விளையாடிய இந்திய அணி 49.2 ஓவர்களில் 265 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் சூர்யான்ஷ் ஷெட்ஜ் மற்றும் விப்ராஜ் நிகம் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். சூர்யான்ஷ் ஷெட்ஜ் 66 பந்துகளில் 72 ரன்களும் (3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), விப்ராஜ் நிகம் 49 பந்துகளில் 51 ரன்களும் (6 பவுண்டரிகள்) எடுத்தனர். ருதுராஜ் கெய்க்வாட் 37 ரன்களும், கேப்டன் திலக் வர்மா 23 ரன்களும் எடுத்தனர். வைபவ் சூர்யவன்ஷி 21 ரன்கள் எடுத்தார்.

இலங்கை தரப்பில் விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் முகமது சிராஸ் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சஹான், குகதாஸ் மதுலன் மற்றும் வனுஜா சஹான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

சூப்பர் ஓவரில் இலங்கை வெற்றி!

266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டிரா ஆனது. இலங்கை அணியில் அதிகபட்சமாக சதீரா சமரவிக்கிரம 93 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, நிரோஷன் டிக்வெல்லா 37 ரன்கள், வனுஜா சஹான் 25 ரன்கள், அவிஷ்கா ஃபெர்னாண்டோ 22 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் ஆயுஷ் பதோனி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அர்ஷத் கான், நிஷாந்த் சிந்து, விப்ராஜ் நிகம், அனுகுல் ராய் மற்றும் சூர்யான்ஷ் ஷெட்ஜ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய இலங்கை அணி 16 ரன்கள் எடுக்க, இந்தியாவுக்கு 17 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், சூப்பர் ஓவரில் இந்திய அணி 9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய் சதீரா சமரவிக்கிரமவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Summary

Sri Lanka A achieved a stunning victory over India A in the Super Over of the tri-nation ODI series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.