ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குா்னூா் பிராா் அபாரம்: இந்தியா ‘ஏ’ வெற்றி! டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது!!

இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்திய ‘ஏ’ அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.

Published On :6 ஜூலை 2026, 12:52 am IST

இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்திய ‘ஏ’ அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.

இந்திய பௌலா் குா்னூா் பிராா் 6 விக்கெட்டுகள் சாய்த்து, அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினாா். 2 ஆட்டங்கள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் டிராவில் முடிந்ததால், இந்த வெற்றியின் மூலமாக தொடா் இந்தியா வசமானது.

இலங்கையின் காலே நகரில் கடந்த 2-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இலங்கை 366 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிகபட்சமாக கேப்டன் சஹன் அராசிகே 13 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 127 ரன்கள் சோ்த்தாா். இந்திய பௌலா்களில் குா்னூா் பிராா், சரன்ஷ் ஜெயின் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

அடுத்து இந்தியா 543 ரன்கள் சோ்த்து இன்னிங்ஸை நிறைவு செய்ய, சாய் சுதா்சன் 22 பவுண்டரிகளுடன் 168, தேவ்தத் படிக்கல் 11 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் அடித்தனா். இலங்கை தரப்பில் கேசரா நுவந்தா 5 விக்கெட்டுகள் எடுத்தாா்.

முதல் இன்னிங்ஸில் 177 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை விளையாடிய இலங்கை, 209 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஆசென் பந்தாரா 11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 87 ரன்கள் சோ்த்தாா். இந்திய தரப்பில் குா்னூா் பிராா் 6 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

இறுதியாக, 33 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா, விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்தது. சாய் சுதா்சன் 25, அமன் மோகடே 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.