இன்டர்நேஷ்னல் மாஸ்டர் லீக்: இந்தியா உள்பட 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இன்டர்நேஷ்னல் மாஸ்டர் லீக் கிரிக்கெட் தொடரில் இந்தியா உள்பட 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்.
இந்திய அணி, மே.இ.தீ.அணி
இந்திய அணி, மே.இ.தீ.அணிபடங்கள்: எக்ஸ் / ஐஎம்எல்டி20
Published on
Updated on
1 min read

இன்டர்நேஷ்னல் மாஸ்டர் லீக் கிரிக்கெட் தொடரில் இந்தியா உள்பட 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றமடைந்துள்ளது.

மார்ச்.1 முதல் மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, ஆஸி., இலங்கை, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மே.இ.தீ. ஆகிய அணிகள் விளையாடுகின்றன.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களுக்காக இந்த மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் இருக்கிறது.

இதில் 14ஆவது போட்டியாக மே.இ.தீவுகள் அணி தென்னாப்பிரிக்க அணியுடன் மோதியது.

முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீ. அணி 200/5 ரன்கள் எடுத்தது. தெ.ஆ. அணி 171/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மே.இ.தீ. அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது

மே.இ.தீ. அணியில் சிம்மன்ஸ் 108 ரன்கள் குவித்தார்/ 5 விக்கெட்டுகள் எடுத்த ரவி ராம்பால் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தெ.ஆ. அணியில் ஜாக் காலிஸ் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார்.

இந்தத் தோல்வியின் மூலம் தெ.ஆ.அணி தொடரிலிருந்து வெளியேறியது.

இங்கிலாந்து அணி நான்கு போட்டிகளில் நான்கிலுமே தோல்வியுற்று வெளியேற்றியது.

அரையிறுதிக்கு தேர்வாகியுள்ள அணிகள்

1. இலங்கை மாஸ்டர்ஸ் - 8 + 1.40 புள்ளிகள்

2. இந்திய மாஸ்டர்ஸ் - 8 +1.03 புள்ளிகள்

3. மே.இ.தீ. மாஸ்டர்ஸ் - 6 +0.19 புள்ளிகள்

4. ஆஸி. மாஸ்டர்ஸ் - 6 + 2.63 புள்ளிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com