சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

கடைசி டி20: 10 ஓவர்களில் வென்ற நியூசிலாந்து..! பாகிஸ்தான் படுதோல்வி!

பாகிஸ்தானுக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

தொடரை வென்ற நியூசிலாந்து அணி வீரர்கள். - படம்: எக்ஸ் / பிளாக்கேப்ஸ்.

Updated On :

பாகிஸ்தானுக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி வருகிறது. இதில் 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றன.

இதில் கடைசி டி20 போட்டி இன்று (மார்ச்.26) தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 128/9 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி இந்த இலக்கினை 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

டிம் செய்ஃபெர்ட் 97 ரன்கள் எடுத்து அசத்தினார். ஃபின் ஆலன் 27 ரன்கள் எடுத்தார்.

ஆட்ட நாயகன் விருதுவென்ற நீஷம்.

ஆட்ட நாயகன் விருதுவென்ற நீஷம். - படம்: எக்ஸ்/ பிளாக்கேப்ஸ்.

பந்துவீச்சில் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய ஜிம்மி நீஷம் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். டிம் செய்ஃபெர்ட் தொடர்நாயகான தேர்வானார்.

4-1 என டி20 தொடரை வென்றது நியூசிலாந்து அணி. அடுத்ததாக ஒருநாள் போட்டிகள் மார்ச்.29ஆம் தேதி தொடங்குகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.