
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிகளுக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் நடைபெறவிருக்கும் இதன் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் வரும் ஜூன் மாதம் 11-15ஆம் தேதிகளில் விளையாடுகிறார்கள்.
பார்டர் கவாஸ்கர் தொடரில் தோல்வியுற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தேர்வாகும் வாய்ப்பை இழந்தது. இருப்பினும் 3ஆம் இடம் பிடித்ததால் இந்தியாவுக்கு ரூ.12.32 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
இந்தத் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 30.82 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய சீசனை விட 125 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சீசனைவிட 2 மடங்கு அதிகம்
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 18.49 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த சீசனைவிட 162.5 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக இறுதிப் போட்டிக்கு 5.76 மில்லியன் டாலர் (ரூ. 49. 28 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த சீசனைவிடவும் இரண்டு மடங்கு அதிகம்.
ஐசிசி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை ஆஸி. அணி வென்றது. அதை தக்க வைக்கும் முனைப்பில் கம்மின்ஸ் அணி தயாராகி வருகிறது.
முதல்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் கேப்டன் பவுமா தலைமையில் தென்னாப்பிரிக்க அணியும் தயாராகி வருகிறது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 பரிசுத் தொகை விவரம்
வெற்றியாளர் - ஆஸி. / தெ.ஆ. - ரூ. 30.82 கோடி
2-ஆம் இடம் - ஆஸி. / தெ.ஆ. - ரூ. 18. 49 கோடி
3-ஆம் இடம் - இந்தியா - ரூ. 12.32 கோடி
4-ஆம் இடம் - நியூசிலாந்து - ரூ. 10.27 கோடி
5-ஆம் இடம் - இங்கிலாந்து - ரூ. 8.21 கோடி
6-ஆம் இடம் - இலங்கை - ரூ. 7.19 கோடி
7-ஆம் இடம் - வங்கதேசம் - ரூ. 6.16 கோடி
8-ஆம் இடம் - மே.இ.தீவுகள் - ரூ. 5.13 கோடி
9-ஆம் இடம் - பாகிஸ்தான் - ரூ. 4.11 கோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.