இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான இந்திய மகளிரணி இன்று (மே 15) அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!
படம் | பிசிசிஐ
Published on
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான இந்திய மகளிரணி இன்று (மே 15) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மகளிரணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வருகிற ஜூன் 28 ஆம் தேதி நாட்டிங்ஹமில் நடைபெறுகிறது.

இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய மகளிரணியை பிசிசிஐ இன்று (மே 15) அறிவித்துள்ளது.

7 மாதங்களுக்குப் பிறகு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா இடம்பெற்றுள்ளார். இருப்பினும், அவர் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி விவரம்

ஹர்மன்பிரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக் கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஷ்திகா பாட்டியா, ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, ஸ்நே ராணா, ஸ்ரீ சரணி, சுச்சி உபத்யாய், அமன்ஜோத் கௌர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கௌத் மற்றும் சயாலி சத்கரே.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம்

ஹர்மன்பிரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக் கேப்டன்), பிரதீகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஷ்திகா பாட்டியா, தேஜல் ஹசப்னிஸ், தீப்தி சர்மா, ஸ்நே ராணா, ஸ்ரீ சரணி, சுச்சி உபத்யாய், அமன்ஜோத் கௌர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கௌத் மற்றும் சயாலி சத்கரே.

இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் ஜூலை 16 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com