மகளிர் உலகக் கோப்பை: சதம் விளாசினார் ஸ்மிருதி மந்தனா!

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதம் அடித்துள்ளது குறித்து...
இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா
இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாபடம் |AP
Published on
Updated on
1 min read

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதம் அடித்து அசத்தியுள்ளார்.

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் சூழலில், நவி மும்பையில் உள்ள மைதானத்தில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (அக். 23) மோதுகின்றன.

இந்த நிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரத்திகா ராவல் 30 ஓவர்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை ஆட்டமிழக்காமல் தொடர்ந்து ஆடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 88 பந்துகளில் 100 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். மேலும், அவருடன் விளையாடி வரும் வீராங்கனை பிரத்திகா ராவல் 96 பந்துகளில் 76 ரன்களை எடுத்துள்ளார். இவர்கள் இருவரது கூட்டணியின் மூலம் 31 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 192 ரன்களை குவித்துள்ளது.

இதையும் படிக்க: ரோஹித், ஷ்ரேயாஸ் அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு 265 ரன்கள் இலக்கு!

Summary

Indian player Smriti Mandhana scored a stunning century in the Women's ODI World Cup match against New Zealand.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com