
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஹாங் காங் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஹாங் காங் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஹாங் காங் முதலில் பேட் செய்தது.
முதலில் விளையாடிய ஹாங் காங் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிஸாகத் கான் 40 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஸீசன் அலி 30 ரன்களும், கேப்டன் யாசிம் முர்டாஸா 28 ரன்களும் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் தன்சிம் ஹாசன் சாகிப், ரிஷாத் ஹொசைன் மற்றும் டஸ்கின் அகமது தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் களமிறங்குகிறது.
Hong Kong, playing their first match against Bangladesh in the Asia Cup cricket series, scored 143 runs for the loss of 7 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.