ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று.! நேரம், அட்டவணை, திடல்! - முழு விவரம்

சூப்பர் 4 சுற்றுக்கான போட்டி நேரம், அட்டவணை, திடல் விவரம் பற்றி...
இந்தியா - பாகிஸ்தான்.
இந்தியா - பாகிஸ்தான்.
Published on
Updated on
1 min read

சூப்பர் 4 சுற்றுக்கான போட்டி நேரம், அட்டவணை, திடல் விவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் உள்பட 8 அணிகள் பங்கேற்ற ஆசியக் கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தத் தொடரில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என நான்கு அணிகள் தேர்வாகியுள்ளன. குரூப் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தானும் குரூப் 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம் அணியும் தேர்வாகியுள்ளன.

குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. ஆனால், குரூப் பி பிரிவில் இந்திய அணி இன்று நடைபெறும் ஓமனுக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறது.

ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி ஓமனுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தாலும், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் தொடரும். அதனடிப்படையில் சூப்பர் 4 சுற்றுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சூப்பர் 4 சுற்றுக்கான அட்டவணை

  • இலங்கை vs வங்கதேசம் - துபை

  • இந்தியா vs பாகிஸ்தான் - துபை

  • பாகிஸ்தான் vs இலங்கை - அபுதாபி

  • இந்தியா vs வங்கதேசம் - துபை

  • பாகிஸ்தான் vs வங்கதேசம் - துபை

  • இந்தியா vs இலங்கை - துபை

(அனைத்துப் போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.)

ரவுண்ட் ராபின் முறை

சூப்பர் 4 சுற்றில் உள்ள அனைத்து அணிகளும் தங்களுக்கு ஒவ்வொரு ஆட்டத்தில் ரவுண்ட் ராபிம் முறையில் விளையாடுகின்றன. இதில், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

லீக் சுற்று போலவே இந்தச் சுற்றிலும் வெற்றிபெறும் அணிக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும்.

அட்டவணையில் இரு அணிகள் சரிசமமான நிலையில் இருந்தால் ரன் ரேட் அடிப்படையில் அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும்.

Summary

Asia Cup Super 4s Schedule: Full list of fixtures, match dates, venues, timings

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com