
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானால் இந்தியாவை தோற்கடிக்க முடியாது என இளம் ரசிகர்கள் பலரும் இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. துபையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றில் ஒரு முறையும், சூப்பர் 4 சுற்றில் ஒரு முறையும் மோதின. நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 3-வது முறையாக பாகிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.
இந்த நிலையில், ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானால் இந்தியாவை தோற்கடிக்க முடியாது என இளம் ரசிகர்கள் பலரும் இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டி குறித்து இந்திய ரசிகர்கள் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவிப்பார். பாகிஸ்தான் அணியில் இளம் வீரர் சைம் ஆயுப் நன்றாக செயல்படுவார். ஆசிய கோப்பையை இந்திய அணி எளிதில் வெல்லும்.
அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி ரன்கள் குவிப்பார். அவர் விளையாடுவதைப் பார்க்க ஆர்வமாக காத்திருக்கிறோம். பாகிஸ்தான் அணியால் இந்தியாவை தோற்கடிக்க முடியாது. இந்திய அணி ஆசிய கோப்பையை கண்டிப்பாக வெல்லும் என்றனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்களுக்குள் இதுவரை 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் இந்திய அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், முதல் முறையாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளதால், இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.