லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

1 ரன் ஏன் எடுக்கவில்லை? சோகத்தையும் விமர்சனத்தையும் எதிர்கொண்ட டேவிட் மில்லர்!

தில்லி கேபிடல்ஸ் அணி வீரர் டேவிட் மில்லரின் செயல் குறித்து...

David Miller and Thrilling Moments...

டேவிட் மில்லரும் த்ரில் காட்சிகளும்... - படங்கள்: ஐபிஎல்

Published On :

நடப்பு ஐபிஎல் போட்டியின் 14-ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை புதன்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது. நடப்பு சீசனில் குஜராத்துக்கு இது முதல் வெற்றியாகும்.

இந்தப் போட்டியில் 19.5 பந்தில் 1 ரன் எடுக்கும் வாய்ப்பு இருந்தும் டேவிட் மில்லர் நிராகரித்தது மிகுந்த விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

டாஸ் வென்ற தில்லி பந்துவீச, குஜராத் அணி 20 ஓவர்களில் 210/4 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தில்லி அணி 20 ஓவர்களில் 209/8 ரன்கள் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

இந்தப் போட்டியில் கடைசி 2 ஓவர்களில் 36 ரன்கள் தேவையானபோது 19ஆவது ஓவரில் (வைட், 6, 4, 6, 1, 4, 1) 23 ரன்கள் எடுத்ததால், தில்லி அணி வெல்வதற்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

கடைசி ஓவரில் பிரசித் கிருஷ்ணா சிறப்பாக பந்துவீசி (4, W, 1, 6, 0, W) 11 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் இருக்கும்போது 19.5 பந்தில் 1 ரன் எடுக்கும் வாய்ப்பு இருந்தும் டேவிட் மில்லர் நிராகரித்தார்.

பின்னர் கடைசி பந்தில் ரன் ஓடும்போது குல்தீப் ரன் அவுட்டானார். வைட் ரிவிவ் எடுத்தும் பயனில்லாமல் தில்லி தோற்றது.

இந்தக் காரணத்தினால் டேவிட் மில்லர் மிகுந்த மனமுடைந்து, கண்ணீர் விட்டபடி சென்றார். இருந்தும் அவரது செயலைப் பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்தப் போட்டியில் டேவிட் மில்லர் காயம் காரணமாக ரிடையர் ஹர்ட் ஆகி மீண்டும் இறுதியில் வந்து சிறப்பாக விளையாடி பின்னர் கடைசி 2 பந்தில் சொதப்பி ஏமாற்றம் அளித்தார்.

Summary

Why didn't he take that single run? David Miller faces heartbreak and criticism ipl 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.