ஆர்சிபி வீரர் தேவ்தத் படிக்கல் அணியின் ஆலோசகர் தினேஷ் கார்த்திக் குறித்து மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார். தனது தன்னம்பிக்கை உயர்வதற்குக் காரணம் தினேஷ் கார்த்திக்தான் எனக் கூறியுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 205/3 ரன்கள் எடுக்க, ஆர்சிபி அணி 18.5 ஓவர்களில் 206/5 ரன்கள் எடுத்து வென்றது. இந்த வெற்றியுடன் ஆர்சிபி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்தப் போட்டியில் தேவ்தத் படிக்கல் 27 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அசத்தினார். இதில் 2 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார்.
இந்தப் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் தேவ்தத் படிக்கல் முதலிடம் பிடித்து அசத்தினார். அதனால் அவருக்கு விருதும் வழங்கப்பட்டது. இது குறித்து தினேஷ் கார்த்திக் உடனான உரையாடலில் படிக்கல் பேசியிருப்பதாவது:
பந்தைப் பார்த்து அதற்கேற்ப விளையாட வேண்டும் என வந்தேன். குஜராத் அணியினர் வேகமாக வீசினார்கள். அதிகமாக சிந்திக்கவில்லை; எளிமையான திட்டங்களுடன் வந்திருந்தேன்.
உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடியதால் சிறிது தன்னம்பிக்கை இருந்தது. இருப்பினும் கடந்த சில போட்டிகள் சரியாக விளையாடவில்லை. நான் என்னுடைய நலனைப் பார்க்காமல் அந்தச் சூழலில் அணிக்கு என்ன தேவையோ அதைப் பார்த்து விளையாட முடிவெடுத்தேன்.
நான் தற்போது உங்களைப் (தினேஷ் கார்த்திக்) புகழப் போகிறேன். உங்களுடன் இணைந்து பணியாற்றியதில் இருந்து என்னுடைய தன்னம்பிக்கை உயர்ந்துள்ளது. நான் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவை அளித்துள்ளீர்கள். இதற்காக நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்றார்.
Summary
Devdutt Padikkal says working with dinesh karthik is giving me a confidence.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓடிடியில் நீளிரா!

ஹாலிவுட் படத்துக்கு குரல் கொடுத்த நடிகர் அர்ஜுன், பாடகர் கார்த்திக்!

என்னுடைய வளர்ச்சிக்குக் காரணம் இவர்தான்; மனம் திறந்த தேவ்தத் படிக்கல்!

நடிகராகும் கார்த்திக் சுப்புராஜ்?
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



