FOLLOW US

ON GOOGLE DISCOVER

நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

உடல்நிலையுடன் போராட்டம் முதல் தங்கப் பதக்கம் வரை... ஜாஸ்மினின் வெற்றி ரகசியம்!

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் குத்துச்சண்டையில் தங்கப் பதக்கம் வென்ற ஜாஸ்மின் லம்போரியாவின் வெற்றி ரகசியம் குறித்து...

News image

ஜாஸ்மின் லம்போரியா - படம் | AP

Updated On :1 ஆகஸ்ட் 2026, 8:42 pm IST

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா குத்துச்சண்டையில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

குத்துச்சண்டையில் 57 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட ஜாஸ்மின் லம்போரியா, நடப்பு சாம்பியனான நார்தன் அயர்லாந்தைச் சேர்ந்த மைக்கேலா வால்ஷை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். கடந்த காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த நிலையில், இம்முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

கிளாஸ்கோவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் ஜாஸ்மின் லம்போரியா நன்றாக சண்டையிட்டார். அவர் பல மாதங்கள் பயிற்சி மேற்கொண்டிருப்பார் எனப் பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால், கடந்த சில மாதங்களாக தனது உடல்நிலையுடன் மருத்துவமனையில் போராடியுள்ளார் ஜாஸ்மின்.

24 வயதாகும் ஜாஸ்மின் லம்போரியா அதீத காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, பல மாதங்களாக குத்துச்சண்டை பயிற்சியிலேயே ஈடுபடவில்லை. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் அதீத காய்ச்சலுடன் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். அதன் மூலம், கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்.

தனது கடினமான நிலைமை குறித்து ஜாஸ்மின் லம்போரியா பகிர்ந்து கொண்டதாவது: நான் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தேன். சரியாக பயிற்சியிலும் ஈடுபடவில்லை. என்னால் முடிந்த அளவுக்கு போராடி வெற்றி பெற்றேன். கடும் காய்ச்சல் காரணமாக அதிக அளவிலான மருந்துகள் உட்கொண்டேன். மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். என்னுடைய உடல்நிலை ஏன் இப்படி மாறியது எனத் தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாக இதிலிருந்து மீண்டு வந்துவிடுவோம் என நம்பினேன்.

நீண்ட நாள்கள் பயிற்சியில் ஈடுபடாதது மனதளவில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. எனக்கு நிறைய எதிர்மறையான எண்ணங்கள் தோன்றின. விளையாட்டுத் துறை சார்ந்த மனோதத்துவ நிபுணர்கள் எனக்கு ஊக்கம் அளித்தார்கள். பயிற்சியாளர்கள் எனக்கு மிகுந்த ஆதரவளித்தார்கள். நம்பிக்கையுடன் இருக்குமாறு அவர்கள் எனக்கு தொடர்ந்து அறிவுறுத்தினார்கள். குறுகிய இடைவெளியில் கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிக்குத் தயாராகி தங்கப் பதக்கம் வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபட முடியாத ஜாஸ்மின் லம்போரியா, கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் பயிற்சியில் ஈடுபட்டு ஒரு மாத கால பயிற்சியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

On the secret behind the success of Jasmine Lamboria, who won the gold medal in boxing at the ongoing Commonwealth Games in Glasgow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.