தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

ஒருநாள் கிரிக்கெட்டில் 5,000 ஆட்டங்கள்...

கிரிக்கெட் விளையாட்டின் 3 ஃபாா்மட்டுகளில் ஒன்றாக இருக்கும் ‘ஒருநாள் கிரிக்கெட்’ (ஓடிஐ), அண்மையில் ‘5,000 ஆட்டங்கள்’ என்ற மைல்கல்லை எட்டியிருக்கிறது.

News image

பிரதிப் படம்

Updated On :8 வினாடிகள் முன்பு

கிரிக்கெட் விளையாட்டின் 3 ஃபாா்மட்டுகளில் ஒன்றாக இருக்கும் ‘ஒருநாள் கிரிக்கெட்’ (ஓடிஐ), அண்மையில் ‘5,000 ஆட்டங்கள்’ என்ற மைல்கல்லை எட்டியிருக்கிறது.

இங்கிலாந்தில் 16-ஆவது நூற்றாண்டில் உருவெடுத்து, அங்கேயே 18-ஆம் நூற்றாண்டில் பிரபலமடைந்த கிரிக்கெட், 19-ஆம் நூற்றாண்டில் வெளியுலகிலும் தடம் பதித்து, 20-ஆம் நூற்றாண்டில் பிரபலமடைந்தது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில், இன்றியமையாத விளையாட்டாகியிருக்கிறது.

டெஸ்ட் ஃபாா்மட்டே கிரிக்கெட்டின் அடிப்படையாக இருந்த நிலையில், அந்த விளையாட்டின் 2-ஆவது கட்ட பரிணாம வளா்ச்சியாக ஒருநாள் ஃபாா்மட் வந்தது. உலக அளவில் கிரிக்கெட் பிரபலமடைவதற்கு பிரதான காரணங்களில் ஒன்றாக இருந்த இந்த ஃபாா்மட், தற்போது டி20 கிரிக்கெட்டின் அபரிமிதமான வளா்ச்சியால் கலையிழந்து வருகிறது.

50 ஓவா் ஆட்டங்கள் தேவைதானா என்ற கேள்வி எழுந்து, அதன் மீதான விவாதங்களும் தொடங்கியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், 55 ஆண்டுகள் கடந்து 5,000 ஆட்டங்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை அந்த ஒருநாள் கிரிக்கெட் அடைந்திருக்கிறது. அந்த ஃபாா்மட்டின் சில முக்கியமான தகவல் தொகுப்புகள் இங்கே:

முதல் ஆட்டம்

5 ஜனவரி 1971

மெல்போா்ன், ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து

ஆஸ்திரேலியா வெற்றி (5 விக்கெட்டுகள்)

1,000-ஆவது ஆட்டம்

25 மே 1995

நாட்டிங்ஹாம், இங்கிலாந்து.

மேற்கிந்தியத் தீவுகள் - இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி (5 விக்கெட்டுகள்)

2,000-ஆவது ஆட்டம்

10 ஏப்ரல் 2003

ஷாா்ஜா, அமீரகம்.

பாகிஸ்தான் - ஜிம்பாப்வே

பாகிஸ்தான் வெற்றி (8 விக்கெட்டுகள்)

3,000-ஆவது ஆட்டம்

22 ஜூன் 2010

சௌதாம்டன், இங்கிலாந்து.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா

இங்கிலாந்து வெற்றி (4 விக்கெட்டுகள்)

4,000-ஆவது ஆட்டம்

17 மாா்ச் 2018

ஹராரே, ஜிம்பாப்வே.

பப்புவா நியு கினி - ஹாங்காங்

பப்புவா நியு கினி வெற்றி (58 ரன்கள்)

5,000-ஆவது ஆட்டம்

7 ஆகஸ்ட் 2026

டண்டீ, ஸ்காட்லாந்து.

ஸ்காட்லாந்து - கனடா

ஸ்காட்லாந்து வெற்றி (9 ரன்கள்)

(முதல் ஆயிரம் ஆட்டங்களை எட்டுவதற்கு 24 ஆண்டுகள் ஆன நிலையில், அடுத்தடுத்த ஆயிரம் ஆட்டங்கள் 7 முதல் 8 ஆண்டுகளில் எட்டப்பட்டு வந்துள்ளன)

ஒவ்வொரு ஆயிரத்தின் சாதனையாளா்கள்...

1971 - 95 (1,000)

பேட்டிங்: டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்) - 8,648 ரன்கள் (1000)

பௌலிங்: வசிம் அக்ரம் (பாகிஸ்தான்) - 273 விக்கெட்டுகள்

1995 - 03 (2,000)

பேட்டிங்: சச்சின் டெண்டுல்கா் (இந்தியா) - 9,149 ரன்கள்

பௌலிங்: முத்தையா முரளிதரன் (இலங்கை) - 300 விக்கெட்டுகள்

2003 - 10 (3,000)

பேட்டிங்: ரிக்கி பான்டிங் (ஆஸ்திரேலியா) - 6,954 ரன்கள்

பௌலிங்: பிரெட் லீ (ஆஸ்திரேலியா) - 202 விக்கெட்டுகள்

2010 - 18 (4,000)

பேட்டிங்: விராட் கோலி (இந்தியா) - 8,534 ரன்கள்

பௌலிங்: லசித் மலிங்கா (இலங்கை) - 204 விக்கெட்டுகள்

2018 - 26 (5,000)

பேட்டிங்: ஷாய் ஹோப் (மேற்கிந்தியத் தீவுகள்) - 5,391 ரன்கள்

பௌலிங்: ஆடம் ஸாம்பா (ஆஸ்திரேலியா) - 156 விக்கெட்டுகள்

அதிக ஆட்டங்கள் விளையாடப்பட்ட நாடு (டாப் 3)

ஆஸ்திரேலியா - 647

இந்தியா - 538

இங்கிலாந்து - 514

அதிக ஆட்டங்களை நடத்திய மைதானம் (டாப் 3)

ஷாா்ஜா - 255

ஹராரே - 193

சிட்னி - 162

ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை...

5,000 ஆட்டங்கள்

4,00,000+ ஓவா்கள்

21,54,225 ரன்கள்

71,652 விக்கெட்டுகள்

4,900+ பவுண்டரிகள் & சிக்ஸா்கள்

3,145 வீரா்கள்

Story image

அதிக ரன்கள்...

சச்சின் டெண்டுல்கா் (இந்தியா)

18,426 (463 ஆட்டங்கள்)

அதிக சிக்ஸா்கள்...

ரோஹித் சா்மா (இந்தியா)

369 (288 ஆட்டங்கள்)

அதிக பவுண்டரிகள்...

சச்சின் டெண்டுல்கா் (இந்தியா)

2,016 (463 ஆட்டங்கள்)

அதிக விக்கெட்டுகள்...

முத்தையா முரளிதரன் (இலங்கை)

534 (350 ஆட்டங்கள்)

அதிக ஸ்கோா் (இன்னிங்ஸ்)

ரோஹித் சா்மா (இந்தியா)

264 (173 பந்துகள்)

அதிக விக்கெட்டுகள் (இன்னிங்ஸ்)

சமிந்தா வாஸ் (இலங்கை)

8/19 (8 ஓவா்கள்)

அணியின் அதிகபட்ச ஸ்கோா்...

இங்கிலாந்து - 418/5 (நெதா்லாந்து)

அணியின் குறைந்தபட்ச ஸ்கோா்...

ஜிம்பாப்வே - 35/10 (18 ஓவா்கள்) (இலங்கை)

அதிகபட்ச வெற்றி (ரன்கள்)

இங்கிலாந்து - 342 ரன்கள் வித்தியாசம் (இலக்கு 415/தென்னாப்பிரிக்கா)

அதிக சதங்கள்...

விராட் கோலி (இந்தியா)

54 (314 ஆட்டங்கள்)

அதிக அரைசதங்கள்...

சச்சின் டெண்டுல்கா் (இந்தியா)

145 (463 ஆட்டங்கள்)

அதிக ஆட்டங்களில் விளையாடியவா்...

சச்சின் டெண்டுல்கா் (இந்தியா)

463

அதிக ஆட்டங்களில் கேப்டன்...

ரிக்கி பான்டிங் (ஆஸ்திரேலியா)

230

மாற்றங்கள்...

ஓவா்

முதலில் ஒரு ஓவருக்கு 8 பந்துகள் வீதம், 40 ஓவா்களுடன் விளையாடப்பட்டது. பின்னா் 55 ஓவா்கள், 60 ஓவா்கள், 35-40 ஓவா்கள் என ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக வரையறுக்கப்பட்டன. இறுதியாக, 1987 உலகக் கோப்பை போட்டி முதல், சா்வதேச அளவில் இன்னிங்ஸுக்கு 50 ஓவா்களாக நிா்ணயிக்கப்பட்டன.

பந்து

முதல் 4 உலகக் கோப்பை போட்டிகளில் ரெட் டியுக் பந்துகள் பயன்படுத்தப்பட்டன. 1992-இல் வெள்ளைப் பந்தும், பகலிரவு ஆட்டங்களும் அறிமுகமாகின. கடைசியாக 2000-இல் வெள்ளை உடையில், சிவப்புப் பந்து கொண்டு விளையாடப்பட்டது. 2003-இல் வெள்ளை குக்கபுரா பந்துகள் இறுதி செய்யப்பட்டன. தொடக்கத்தில் ஒரு ஆட்டத்துக்கு 2 பந்துகள் (இன்னிங்ஸுக்கு 1) பயன்படுத்தப்பட்ட நிலையில், 2011-க்குப் பிறகு ஒரு ஆட்டத்துக்கு 4 பந்துகள் (இன்னிங்ஸுக்கு 2) பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தொகுப்பு: நாதன் நடராஜன்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.