கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது!சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடு
/

ஸ்மித் 71, ஹசன் மஹ்முத் 6 விக்கெட்டுகள்: 198 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆஸ்திரேலியா!

வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் ஹசன் மஹ்முத் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறித்து...

News image

ஸ்டீவ் ஸ்மித், ஹசன் மஹ்முத். - படங்கள்: ஏபி

Updated On :13 ஆகஸ்ட் 2026, 11:57 am IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் ஹசன் மஹ்முத் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

டார்வினில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்த அணி 53 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள் எடுத்து அசத்தினார். ஜேக் வெதரால்ட் 23 ரன்களும் டிராவிஸ் ஹெட் 22 ரன்களும் எடுத்தார்கள். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.

வங்கதேசம் சார்பில் வேகப் பந்துவீச்சாளர் ஹசன் மஹ்முத் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை அடக்கினார். இவருடன் சேர்ந்து மற்ற வேகப் பந்துவீச்சாளரான டஸ்கின் அகமது, எபாடொட் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

தற்போது, வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை விளையாடி வருகிறது. 3 ஓவர்கள் முடிவில் 11 ரன்கள் எடுத்துள்ளது.

Summary

Hasan Mahmud 6 wickets, steve smith 71 runs australia all out for 198 runs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.