மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த மிட்செல் ஸ்டார்க்!

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தது குறித்து...

Mitchell Starc

மிட்செல் ஸ்டார்க் (கோப்புப் படம்) - படம்: ஏபி

Published On :

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் டெஸ்ட் (36 வயது) கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்துள்ளார். இடது கை பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட்டை எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.

டார்வினில் நடைபெற்றுவரும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டார்க் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 53 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்மித் 71 ரன்கள் எடுத்தார்.

வங்கதேச அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. 21 ஓவர்களில் 88 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ஷத்மான் இஸ்லாம் என்ற தொடக்க வீரரை மிட்செல் ஸ்டார்க் போட்டியின் 8.2ஆவது ஓவரில் விக்கெட் வீழ்த்தினார்.

இந்த விக்கெட்டுடன் 434 என்ற இலக்கை அடைந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இடது கை பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட்டை எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.

டெஸ்ட்டில் இடதுகை பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியல்

1. மிட்செல் ஸ்டார்க் - 434 விக்கெட்டுகள் (ஆஸி.)

2. ரங்கன ஹேரத் - 433 விக்கெட்டுகள் (இலங்கை)

3. வாசிம் அக்ரம் - 414 விக்கெட்டுகள் (பாகிஸ்தான்)

4. டேனியல் வெட்டோரி - 362 விக்கெட்டுகள் (நியூசிலாந்து)

5. சமிந்தா வாஸ் - 355 விக்கெட்டுகள் (இலங்கை)

Summary

Mitchell Starc creates new history in Test cricket!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.