
முத்தரப்பு டி20 தொடர்: மீண்டும் தென்னாப்பிரிக்காவுக்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரின் முதல் போட்டியில் அதிர்ச்சியளித்த நமீபியா அணியைப் பற்றி...
தென்னாப்பிரிக்காவுக்கு அதிர்ச்சியளித்தது நமீபியா
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரின் முதல் போட்டியில் அதிர்ச்சியளித்தது நமீபியா அணி.
அடுத்தாண்டு (2027) நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரை நடத்தும் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடுகின்றன.
இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா இரண்டு போட்டிகளில் விளையாடுகின்றன. இதில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்.
இந்தத் தொடர் இன்று (ஆக. 28) தொடங்கிய நிலையில், நமீபியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதின. நமீபியாவில் உள்ள விந்தியோக் கிரிக்கெட் திடலில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன்
பியோர்ன் ஃபோர்டுயின் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.முதலில் பேட்டிங் ஆடிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ஜேன் ஃப்ரிலிங்க் 60 ரன்களும், லோரான் ஸ்டீன்காம்ப் 41 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்க அணித் தரப்பில் சுப்பராயன் 3 விக்கெட்டுகளும், துவான் யான்சன், பியோர்ன் ஃபோர்டு தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர், 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், நமீபியா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சியளித்தது.
அதிகபட்சமாக டெவால்டு பிரேவிஸ் 75 ரன்களும், டுவான் யான்சன் 25 ரன்களும் எடுத்தனர். நமீபியா அணித் தரப்பில் ருபேன் மற்றும் ஜேஜே ஸ்மித் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற ஒரேயொரு டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியிருந்த நமீபியா அணி மீண்டும் வீழ்த்தி வரலாற்று படைத்துள்ளது.
Summary
Namibia take on South Africa in the opening game of the 2026 T20I Tri-Series at the Namibia Cricket Ground in Windhoek. The hosts, led by Gerhard Erasmus, enter with strong momentum and will draw confidence from their four-wicket win over South Africa in their last T20I meeting.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





