3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

பாகிஸ்தான் 110-க்கு 'ஆல் அவுட்'

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 110 ரன்களுக்கு வெள்ளிக்கிழமை ஆட்டமிழந்தது.

Published On :29 ஆகஸ்ட் 2026, 8:10 am IST

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 110 ரன்களுக்கு வெள்ளிக்கிழமை ஆட்டமிழந்தது.

அணியில் அதிகபட்சமாக அஸôன் அவைஸ் 7 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் அடிக்க, இதர பேட்டர்கள் இரட்டை இலக்க ரன்களை கூட எட்டாமல் வீழ்ந்தனர்.

இங்கிலாந்து பெளலர்களில் ஆலி ராபின்சன் 4, ஜோஃப்ரா ஆர்ச்சர் 3, ஜாஷ் டங் 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். இதையடுத்து இங்கிலாந்து, 180 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கி விளையாடி வந்தது.

புகார்: பாகிஸ்தான் சிறையில் உடல்நலக் குறைவுடன் இருக்கும் அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், சிறையிலேயே வைத்திருந்து அவரை கொல்ல பாகிஸ்தான் அரசு முயற்சிப்பதாக, இம்ரான் கான் மகன்களான சுலைமான், காசிம் ஆகியோர் 'ஸ்கை ஸ்போர்ட்ஸ்' சேனலுக்கு பேட்டி அளித்தனர்.

தற்போது இங்கிலாந்து - பாகிஸ்தான் விளையாடி வரும் லார்ட்ஸ் டெஸ்ட்டை நேரலை செய்யும் அதே சேனல், இந்தப் பேட்டியின் முன்னோட்டத்தை ஒளிபரப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆட்டத்தின் முதல் நாளான வியாழக்கிழமை மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தங்கள் அணியை மைதானத்துக்கு அனுப்ப மறுத்தது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அந்த சேனலுக்கு எதிராக புகார் அளிக்க முடிவு செய்து, வீரர்களை ஆட்டத்துக்கு அனுமதித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.