சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

முத்தரப்பு டி20 தொடர்: டெவால்ட் பிரேவிஸ் அதிரடி; தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரானப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Dewald Brevis (File photo)

டெவால்ட் பிரேவிஸ் (கோப்புப் படம்)

Published On :29 ஆகஸ்ட் 2026, 9:31 pm IST

முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரானப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நமீபியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

தென்னாப்பிரிக்காவுக்கு 145 ரன்கள் இலக்கு!

டாஸ் வென்று முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னட் 35 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, மருமானி 13 பந்துகளில் அதிரடியாக 30 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். பென் கரண் 24 ரன்கள், டியான் மையர்ஸ் 17 ரன்கள் மற்றும் வெஸ்லி மத்வீர் 12 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

தென்னாப்பிரிக்கா தரப்பில் டுயன் ஜேன்சன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரேநேலன் சுப்ராயன் இரண்டு விக்கெட்டுகளையும், ஈதன் போஷ், குவெனா மாபாகா மற்றும் ஜோர்ன் ஃபோர்ட்டூயின் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

டெவால்ட் பிரேவிஸ் அதிரடி; தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 13.4 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி அசத்தியது.

தென்னாப்பிரிக்க அணியில் அதிரடியாக விளையாடிய டெவால்ட் பிரேவிஸ் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 32 பந்துகளில் 75* ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, லுஹான் டி பிரிடோரியஸ் 22 ரன்கள், ஜோர்டான் ஹெர்மேன் 20 ரன்கள், டோனி டி ஸார்ஸி 15 ரன்கள் மற்றும் ரூபின் ஹெர்மேன் 11* ரன்கள் எடுத்தனர்.

ஜிம்பாப்வே தரப்பில் பிளெஸ்ஸிங் முசராபானி, நியூமேன் நியாம்ஹுரி மற்றும் பிராட் ஈவன்ஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய டெவால்ட் பிரேவிஸுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Summary

South Africa won the match against Zimbabwe by 7 wickets in the tri-nation T20 series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.